Wimbledon Tennis: நான்காவது சுற்றுக்கு முன்னேறினர் சபலென்கா, முசோவா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
sabalenka, muchova
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 10 வீராங்கனையும், செக் குடியரசைச் சேர்ந்தவருமான கரோலினா முசோவா 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் மனஞ்ச்யா சவாங்கேவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் இவா ஜோவிக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

நாளை நடைபெறும் நான்காவது சுற்று போட்டியில் கரோலினா முசோவா, சக நாட்டு வீராங்கனையான பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்திக்கிறார்.

மற்றொரு போட்டியில் சபலென்கா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை சந்திக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com