மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீராங்கனை

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீராங்கனை
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை மாக்டா லினெட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பயோலினி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற சாதனையை ஜாஸ்மின் பயோலினி படைத்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com