ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினர் சபலென்கா, கோகோ காப்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. அமெரிக்காவின் கோகோ காப் நான்காவது சுற்றில் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினர் சபலென்கா, கோகோ காப்
Published on

மெல்போர்ன்:

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 7-6 (1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடனும், கோகோ காப் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடனும் மோதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com