Wimbledon Tennis: 2வது சுற்றுக்கு முன்னேறினர் சபலென்கா, கோகோ காப்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
sabalenka, coco gauff
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் நம்பர்1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, செர்பியாவின் டியோடரா கோஸ்டோவிச் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் சபலென்கா, அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 7 வீராங்கனையும், அமெரிக்கவைச் சேர்ந்தவருமான கோகோ காப் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டமரா கோர்பாட்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கோகோ காப், அர்ஜென்டினாவின் சோலானா சியாராவை சந்திக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com