சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சபலென்கா, கோகோ காப்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
sabalenka, coco gauff
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, சீனாவின் வனக் ஜின்யு உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஆன் லி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள 4-வது சுற்றில் சபலென்கா, செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடனும், கோகோ காப், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடனும் மோதுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com