ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் காயத்தால் விலகிய ரிபாகினா

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
elena rybakina
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் இருந்து காயம் காரணமாக கஜகஸ்தானின் எலினா ரிபாகினா விலகினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலிறுதி சுற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா மோதுவதாக இருந்தது.

எலினா ரிபாகினாவுக்கு கழுத்து வலி ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கனடாவின் லேலா பெர்னாண்டஸ் அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், உஸ்பெகிஸ்தானின் கமீலா ராகிமோவாவை எதிர்கொள்கிறார்.

X