ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் ரிபாகினா, ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் சுற்றில் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் ரிபாகினா, ஒசாகா வெற்றி
Published on

மெல்போர்ன்:

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, சுலோவேனியாவின் கஜா ஜுவன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் குரோசியாவின் அண்டோனியோ ரூஜியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com