அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ரிபாகினா, நவோமி ஒசாகா வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
rybakina, osaka
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கஜகஸ்தானின் ரிபாகினா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் அனஸ்தசியா ஜகாரோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 7-6 (8-6), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் தியா புரோடினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com