

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளார்.
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது.
சமீபத்தில் நடந்த நிங்போ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், நிங்போ ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் 7 இடங்கள் முன்னேறி 23வது இடத்தில் உள்ளார்.
சபலென்கா 2வது இடத்திலும், மிர்ரா ஆண்ட்ரீவா 3வது இடத்திலும், ஜெசிகா பெகுலா 4வது இடத்திலும், கோகோ காப் 5வது இடத்திலும் உள்ளனர்.