பெண்கள் டென்னிஸ்: நாடு மாறிய அன்னா பிளிங்கோவா - காரணம் இதுதான்

டென்னிஸ் தரவரிசையில் 94-வது இடத்தில் இருந்து வருகிறார்.
anna blinkova
Published on
Summary

ரஷியா சார்பில் விளையாடி வந்த அன்னா பிளிங்கோவா, இனி பிரான்ஸ் சார்பில் விளையாட உள்ளேன் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை அன்னா பிளிங்கோவா. 1998-ம் ஆண்டு செப்டம்பர் 10-ல் மாஸ்கோவில் பிறந்த இவர், நீண்ட காலமாக ரஷியா சார்பில் விளையாடி வந்தார்.

செப்டம்பர் 2026 இல், தான் இனி சர்வதேச அரங்கில் பிரான்ஸ் நாட்டின் சார்பில் விளையாடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரான்சின் கேன்ஸ் நகரில் கடந்த 10 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வந்த இவர், தற்போது அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அன்னா பிளிங்கோவா இனி பிரான்ஸ் சார்பில் விளையாட உள்ளேன் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் தற்போது 94-வது இடத்தில் இருந்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com