ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2வது சுற்றில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
rublev
Published on: 
Summary

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், ஜப்பானின் ரெய் சகாமோடோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

நாளை நடைபெறவுள்ள 3-வது சுற்றில் ஜப்பான் வீரர், அலெக்ஸ் டி மினார் உடன் மோதவுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com