ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூப்லெவ்

ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூப்லெவ்
Published on

பெர்லின்:

ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.

இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 6-4 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதியில் இத்தாலியின் பிலேவியோ கோபாலி உடன் ரூப்லெவ் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com