Barcelona Open | இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூப்லெவ்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
Barcelona Open | இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூப்லெவ்
Published on

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், செர்பியாவின் மெட்ஜிடோவிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெட்ஜிடோவிக் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரூப்லெவ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டி முன்னேறி அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com