French Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரூப்லெவ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
rublev
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், போர்ச்சுகலின் நியூனோ போர்ஜஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 7-5, 7-6 (7-2), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com