2010-க்குப் பிறகு முதன்முறையாக டாப் 50 பட்டியலில் இடமிழந்த போபண்ணா..!

பிரெஞ்சு ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3ஆவது சுற்றோடு போபண்ணா ஜோடி வெளியேறியது.இதனால் தரவரிசையில் 20 இடங்களில் சரிந்து 53ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
2010-க்குப் பிறகு முதன்முறையாக டாப் 50 பட்டியலில் இடமிழந்த போபண்ணா..!
Published on

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா. இவர் ஒற்றையர் பிரிவில் அதிக அளவில் சாதிக்கவில்லை என்றாலும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ஏடிபி தரவரிசையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து 50 தரவரிசைக்குள் இருந்து வந்தார்.

பிரெஞ்சு ஓபனில் 3ஆவது சுற்றோடு போபண்ணா ஜோடி வெளியேறியது. இதனால் தரவரிசையில் 20 இடங்களில் சரிந்து 53ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 50 தரவரிசைக்குள் இருந்து வந்தார். தற்போது 20 இடங்கள் சரிவை சந்தித்து 53 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் 15 வருடத்திற்குப் பிறகு முதல்முறைாக டாப் 50 பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com