சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம் வீரர்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
collignon
Published on

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னன், இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கொலிக்னன் 7-6 (7-2), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி ஆட்டங்கள் நாளை மறுதினம் நடைபெற உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com