ஜனவரி முதல் நாளில் 165: ஆண்டு இறுதியில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்திய ஜோடார்

ஆண்கள் ஒற்றையரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
jodar
Published on: 
Summary

சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

இதில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 2-வது இடம் பிடித்துள்ளார்.

ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் பென் ஷெல்டன் 4வது இடத்திலும், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 5வது இடத்திலும் உள்ளனர்.

டாப் 10 பட்டியலில் ஜோடார்

பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6வது இடத்திலும், இத்தாலியின் பிளேவியோ கோபாலி 7வது இடத்திலும், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே 8வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 9வது இடத்திலும் உள்ளனர். ஸ்பெயினின் ரபேல் ஜோடார் தரவரிசையில் 10-வது இடம் பிடித்துள்ளார்.

28 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

இந்நிலையில், 2026-ம் ஆண்டின் ஜனவரியில் தரவரிசையில் 165வது இடத்தில் இருந்த ரபேல் ஜோடார், ஆண்டின் இறுதியில் தரவரிசையில் 155 இடங்கள் முன்னேறி டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இதன்மூலம் ஆண்ட்ரே அகாசியின் 28 ஆண்டு கால சாதனையை ரபேல் ஜோடார் முறியடித்துள்ளார்.

X