ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீரர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெறுகிறது.
rafael jodar
Published on: 
Summary

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய காஸ்பர் ரூட் முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரபேல் ஜோடார் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com