

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், நெதர்லாந்தின் போடிக் வான் டே சாண்டல்ப் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய நெதர்லாந்து வீரர் முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜோடார் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.