ஹாம்பர்க் ஓபன்: ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.இதில் போலந்து வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாம்பர்க் ஓபன்: ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

பெர்லின்:

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com