அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயினின் பவுலா படோசா விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயினின் பவுலா படோசா விலகல்
Published on

நியூயார்க்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் 27 வயது ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த படோசா, முதுகுவலி காரணமாக அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com