ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பவுலா படோசா

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
paula badosa
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஹங்கேரியின் பன்னா உத்வார்டி உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய பவுலா படோசா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com