பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நம்பர் 1 வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி

நேர்செட்டில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
ஸ்வரேவ்
ஸ்வரேவ்
Published on: 

பாரீஸ் ஓபன் டென்னிசில் ரவுண்ட் ஆப் 32-ல் நம்பர் ஒன் வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், தரநிலை பெறாத இத்தாலியைச் சேர்ந்த லாரன்சோ முசெட்டியை எதிர்கொண்டார்.

ஸ்வரேவ் நேர்செட்டில் தோல்வி

இதில் 0-2 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. பின்னர் ஸ்வரேவ் 6(5)-7(7) எனத் தோல்வியடைந்தார். ஆனால், 2-வது செட்டில் 2-6 என எளிதாக இழந்தார். இதனால் 2-வது சுற்றோடு ஏமாற்றம் அடைந்தார். முதல் சுற்றில் விளையாடாமல் ஸ்வரேவ் 2-வது சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

7-ம் நிலை வீரரான தியபோ 3-6, 6-1, 6(9)-7(11) என தோல்வியடைந்தார்.

X