சீன ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நோஸ்கோவா

அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா, லிண்டா நோஸ்கோவா மோதினர்இந்த போட்டியில் முதல் செட்டை நோஸ்கோவாவும் 2-வது செட்டை பெகுலாவும் கைப்பற்றினர்.
சீன ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நோஸ்கோவா
Published on

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) லிண்டா நோஸ்கோவா (செக்) ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த போட்டியில் முதல் செட்டை நோஸ்கோவாவும் 2-வது செட்டை பெகுலாவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் நோஸ்கோவா 7-6 (8-6) 3-வது செட்டை கைப்பற்றினார்.

இதனால் 6-3, 6-1, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நோஸ்கோவா முன்னேறினார். இறுதிப்போட்டியில் நோஸ்கோவாவும் அனிசிமோவாவும் நாளை மோதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com