

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் சாரா பெஜ்லெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் பொலினா குடர்மெடோவாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.