ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்
Published on

பாஸ்தாத்:

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், குரோசியாவின் டுஜே அஜ்டுகோவிச் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை டுஜே 6-4 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 6-3 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com