

ஸ்வீடனில் நடந்து வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் முன்னேறினார்.
ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே உடன் மோதுவதாக இருந்தது.
ஆனால் காயம் காரணமாக ஹோல்ஜர் ரூனே போட்டியில் இருந்து விலகியதால், டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ, அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அரையிறுதியில் லாரன்சோ முசெட்டியுடன் டெய்லர் பிரிட்சும், அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் தியாகோ அகஸ்டினும் மோதுகின்றனர்.