Barcelona Open | காலிறுதிக்கு முன்னேறினார் இத்தாலி வீரர்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
Barcelona Open | காலிறுதிக்கு முன்னேறினார் இத்தாலி வீரர்
Published on

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் முசெட்டி பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com