Barcelona Open | முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
லாரன்சோ முசெட்டி
லாரன்சோ முசெட்டி
Published on

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஸ்பெயினின் மார்ட்டின் லாண்டலூஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்றில் பிரான்சின் கொரண்டின் மவுடெட் உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com