ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
mirra andreeva
Published on: 

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிக்கு ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா நேரடியாக தகுதி பெற்றார்.

இந்நிலையில், இன்று நடந்த 2வது சுற்று போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, சக நாட்டு வீராங்கனை எகர்டினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-3, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com