

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லேலா பெர்னாண்டஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.