

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைனின் டாரியா ஸ்நைகர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிக்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.