அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற மென்சிக்-முசோவா ஜோடி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
mensik, muchova
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையரில் மென்சிக், முசோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் சுற்று நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக்-கரோலினா முசோவா ஜோடி, இத்தாலியின் பிளேவியோ கோபாலி-சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய மென்சிக்-முசோவா ஜோடி 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஜோடி, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்-ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஜோடி, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா-ஆண்ட்ரே ரூப்லெவ் ஜோடி உள்ளிட்ட முன்னணி ஜோடிகள் தோல்வி அடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com