

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இன்று நடந்த 2வது சுற்று போட்டியில் நம்பர் 6 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் பொடிக் வான் டே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய நெதர்லாந்து வீரர் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-6 (7-3), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.