துபாய் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுவதாக இருந்தது.

இந்நிலையில், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக கிரீக்ஸ்பூர் அறிவித்தார். இதன்மூலம் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com