மியாமி ஓபன் டென்னிஸ் - மெத்வதேவ், சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினர்

மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.இதில் மெத்வதேவ், சின்னர் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
டேனில் மெத்வதேவ்
டேனில் மெத்வதேவ்
Published on

மியாமி:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபரை சந்தித்தார். இதில் மெத்வதேவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், பின்லாந்து வீரர் எமில் ரூசோவுரியுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-1 என்ற நேர்செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com