கத்தார் ஓபன்: மெத்வதேவ், ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கத்தார் ஓபன்: மெத்வதேவ், ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி
Published on

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரரான கரன் கச்சனோவ் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-5, 6-3 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 6-3, 6-4 என கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com