இத்தாலி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவுக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க வீரர்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவுக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க வீரர்
Published on

ரோம்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார். ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com