

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 7 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் பிளேவியோ கோபாலி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோபாலி 6-3, 5-7, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 7 வீரரான மெத்வதேவ் தொடரில் இருந்து விலகினார்.