ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
medvedev
Published on: 
Summary

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செக் குடியரசின் டாலிபர் விர்சினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டாமி பால், ஸ்பெயினின் ரபேல் ஜோடார், நார்வேயின் கேஸ்பர் ரூட் உள்ளிட்டோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com