பாரிஸ்:.பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. .ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் ஜேம் முனார் உடன் மோதினார்..இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.