

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் வென்ற ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அட்ரியன் மன்னாரினோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.