ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
medvedev
Published on: 
Summary

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட டாமி பால் அதிரடியாக ஆடி 2வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் பொறுப்புடன் ஆடிய மெத்வதேவ் 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com