

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ரபேல் ஜோடார், நார்வேயின் கேஸ்பர் ரூட் உள்ளிட்டோர் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.