அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
medvedev
Published on: 
Summary

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முன்னேறினார்.

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுக்கு ரஷியாவின் டேனில் மெத்வதேவ் நேரடியாக தகுதிபெற்றார்.

இன்று நடந்த 2வது சுற்றில் மெத்வதேவ், ஜப்பானின் ஷோ ஷிமாபுகுரோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-1 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள காலிறுதியில் மெத்வதேவ், பிரான்சின் டெரன்ஸ் ஆத்மனே உடன் மோதுகிறார்.

ஏற்கனவே ரஷியாவின் கரண் கச்சனாவ், கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com