சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய மரியா சக்காரி, மிர்ரா ஆண்ட்ரீவா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
mirra andreeva
Published on: 
Summary

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரின் காலிறுதிக்கு ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, கிரீசின் மரியா சக்காரி ஆகியோர் முன்னேறினர்.

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, பெலாரசின் சாஸ்னோவிச் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மிர்ரா ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீசின் மரியா சக்காரியா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நாவ் ஹிபினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதியில் மரியா சக்காரி ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனுடனும், மிர்ரா ஆண்ட்ரீவா கனடாவின் லேலா பெர்னாண்டசுடனும் மோதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com