வூஹான் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய மரியா சக்காரி, பவுலினி

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
paolini
Published on: 
Summary

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னணி வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பவுலினி 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீசின் மரியா சக்காரி 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com