ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மரியா சக்காரி, அலெக்சாண்ட்ரா ஈலா

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
eala
Published on: 
Summary

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீசின் மரியா சக்காரி, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, ஆஸ்திரேலியாவின் மரியா ஜாயிண்ட் உடன் மோதினார்.

இதில் முதல் சுற்றில் மரியா ஜாயிண்ட் 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மரியா சக்காரி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் டெரசா வேலண்டோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X