குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய மேடிசன் கீஸ், அனிசிமோவா

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்றார்.
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய மேடிசன் கீஸ், அனிசிமோவா
Published on

லண்டன்:

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com