

சீனாவில் நடந்து வரும் செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ சொனேகோ தோல்வி அடைந்தார்.
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ சொனேகோ, அமெரிக்காவின் ஜேன்சன் புருக்ஸ்பி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என இழந்தார் புரூக்ஸ்பி. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 7-5, 6- 2 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இத்தாலியின் லாரன்சோ சொனேகோ தொடரில் இருந்து வெளியேறினார்.